அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா?? இந்த பானத்தை குடிங்க!!
அதிகமாக உணவு சாப்பிடுவது, தேவையற்ற நேரங்களில் உட்கொள்வது, போன்ற காரணங்களால் அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். அசிடிட்டியை உடனே தீர்க்க உதவும் பானங்களை பற்றி இங்கு காணலாம்.
1. இஞ்சி டீ:
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அஜீரண கோளாறு போக்கி அசிடிட்டி பிரச்சனையை தீர்க்க பெரிதும் உதவுகிறது.
2. கற்றாழை ஜூஸ்:
இந்த ஜூஸ் குடிப்பது வீக்கத்தை குறைப்பதோடு வயிற்றில் அசவுகரியத்தை குறைக்க கூடும். இது அசிடிட்டியை தீர்ப்பதிலும் மிகவும் பயனுள்ள வழியாகும்.
3. மோர்:
மோரில் இயற்கையாகவே அமிலத்தன்மையை சமன் செய்யும் பண்பு உள்ளது. இதைக் குடிக்கையில் வயிற்றில் அமிலத்தன்மை அளவை சமநிலை ஆக்கி அசிடிட்டி பிரச்சனையை சரி செய்கிறது.
4. சீரகத் தண்ணீர்:
இந்த பானத்தை குடிப்பது செரிமானத்திற்கு உதவும். என்சைமின் உற்பத்தியை அதிகரித்து அசிடிட்டி பிரச்சனையை குறைக்கிறது.
5. தேங்காய் தண்ணீர்:
தேங்காய் தண்ணீர் இயற்கையாகவே அல்கலைன் தன்மை கொண்டது. இது வயிற்றில் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தி அசிடிட்டி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
6.. பெருஞ்சீரகம் தேநீர்:
இது வயிற்றில் வீக்கத்தை குறைப்பதோடு இரைப்பை அழற்சியை தடுக்கிறது. இந்த பானத்தை குடிப்பது அசிடிட்டியில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது.
7. ஆப்பிள் சீடர் வினிகர் தண்ணீரில் கலந்து பருகலாம்.