ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒரு டம்ளர் வெந்தய நீர்!

0
158
#image_title

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒரு டம்ளர் வெந்தய நீர்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் உணவுகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம்.

தற்போது உள்ள சூழலில் சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இன்சுலின் சரியான அளவு சுரக்காதது தான். இதனை தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மூலமாகவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் அதனைப் பற்றி விரிவாக காணலாம்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் அனைத்து பண்புகளையும் வெந்தயத்தில் நிறைந்துள்ளது வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து,மாவுச்சத்து ஆகியவை அதிகப்படியாக நிறைந்துள்ளது. ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகுவதன் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உதவுகிறது. முளைகட்டிய வெந்தயத்தினை உம்பதன் காரணமாகவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.

கணையத்தில் இன்சுலின் சுரப்பது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதனை குணப்படுத்தும் பண்புகள் மஞ்சள் தூளில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. நாம் தினசரி உட்கொள்ளும் உணவுகளில் மஞ்சள் தூள் சேர்த்து உணவு உண்பதன் காரணமாக ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.

பல வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகப்படியாக நிறைந்துள்ளது. சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.