மூச்சுத் திணறல் மூக்கடைப்பு பிரச்சனைகள் குணமாக்க வேண்டுமா? அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க!
நமக்கு சளி பிடித்திருக்கும் சமயங்களில் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும். மேலும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இந்த மூச்சுத் திணறல், மூக்கடைப்பு போன்ற மூச்சுக் குழல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தையும் குணமாக்க நாம் சித்தரத்தை மூலிகை பொருளை பயன்படுத்தலாம்.
சித்தரத்தை நமக்கு ஏற்படும் நெஞ்சு சளி, கபம், கோழை, ஈளை, இருமல் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். சித்தரத்தையில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, சோடியம், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் இருக்கின்றது.
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் சித்தரத்தை பொடியை சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். காய்ச்சல், ஜுரம் போன்றவற்றையும் சித்தரத்தை குணப்படுத்துகின்றது. இந்த சித்தரத்தையை மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சனைகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* சித்தரத்தை
* தேன்
செய்முறை…
கடையில் விற்பனை செய்யப்படும் சித்தரத்தையை முதலில் வாங்கிக் கொள்ளவும். பின்னர் இதை அம்மியில் வைத்து இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இடித்த இந்த விழுதுடன் சிறிதளவு தேன் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதை நன்கு கலந்து விட்டு சாப்பிடலாம். தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் சளி, மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளும் குணமாகும். சித்தரத்தை கிடைக்கவில்லை என்றால் சித்தரத்தை பொடியை வாங்கி அதில் தேன் கலந்து கூட சாப்பிட்டு வரலாம்.