Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுடைய தலை முடியில் உள்ள வறட்சியை சரி செய்ய வேண்டுமா? வாழைப்பழம் மட்டும் போதும்! 

Need to fix your dry scalp? Banana is enough!

Need to fix your dry scalp? Banana is enough!

உங்களுடைய தலை முடியில் உள்ள வறட்சியை சரி செய்ய வேண்டுமா? வாழைப்பழம் மட்டும் போதும்!
நம்முடைய உடலில் உள்ள உறுப்புகளுக்கு  நாம் அதிக கவனம் செலுத்துகிறோமோ இல்லையோ நம்முடைய தலையில் உள்ள முடிக்கு நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். அதாவது தலையில் பொடுகு, ஈறு இதெல்லாம் இருந்தால் அதை போக்க தனியாக ஷேம்பு வாங்கி பயன்படுத்துவோம்.
அதே போல முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால் அதற்கும் தனியாக மருந்து வாங்கி பயன்படுத்துவோம். தலைமுடி வெள்ளையாக மாறினால் அதற்கும் தனியாக மருந்து, அடர்த்தி அதிகமாக மருந்து என்று தனித்தனியாக மருந்து வாங்கி தலைக்கு தேய்த்து தலைக்கு பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்துவோம்.
அந்த வகையில் நாம் தலையில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் அது தலைமுடியில் ஏற்படும் வறட்சி தான். தலைமுடி வறட்சி தான் நம்முடைய தலையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணம் ஆகும். முடி உதிர்தல் போன்ற முக்கியமான பிரச்சனைக்கு தலைமுடி வறட்சி தான் காரணம். இந்த தலைமுடி வறட்சியை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* வாழைப்பழம்
* வெந்தயப் பொடி
செய்முறை…
முதலில் சிறிதளவு வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பவுலில் வாழைப்பழங்களை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதை மசித்து கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து எடுத்து வைத்துள்ள வெந்தயப் பொடியை இந்த மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நன்றாக கலந்துவிட்டு இந்த கலவையை தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். அதன் சில நிமிடங்கள் கழிந்து தலைக்கு குளிக்கலாம். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடியில் உள்ள வறட்சி நீங்கும். வெந்தயப் பொடி தலைக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
Exit mobile version