Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா எதிரொலி! நீட் தேர்வு ஒத்திவைப்பு!

தற்சமயம் நோய்த்தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக, நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் 12 மற்றும் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் இருக்கின்றன.

அதேபோல பல்வேறு தேர்வுகள் இந்த நோய் தாக்கத்தின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு மருத்துவ முதுநிலைப் படிப்பிற்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ முதுநிலை நீட் தேர்வு எதிர்வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட இருப்பதாக திட்டமிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நோய் தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு தகுதித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. அதன்படி நீட் நுழைவுத் தேர்வையும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் அரசிற்கு வலியுறுத்தி வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், மருத்துவப்படிப்பிற்கான நீட்நுழைவுத்தேர்வும்.ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நோய்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, இளம் மருத்துவர்களின் நலனை கருத்தில் வைத்து எதிர்வரும் 18ஆம் தேதி நடத்தப்பட விருந்த நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். உரிய ஆலோசனைக்குப் பின்னர் இதற்கான மறுதேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version