குளிர்காலத்தில் கூந்தலை பராமரிக்க வேண்டுமா!!? இதோ எளிமையான வழிமுறைகள்!!!
குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிக்க சில இயற்கையான எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டு நம்முடைய தலை முடியை பராமரித்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் இது வரை வெயில் காலம் நிகழ்ந்து வந்திருந்த நிலையில் தற்பொழுது குளிர் காலம் தொடங்கியுள்ளது. வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் தலைமுடி விரைவில் வறட்சி அடையும். அதனால் தலைமுடி உதிர்தல், தலைமுடி இரண்டாக உடைதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
எனவே வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது என்பது மிகுந்த அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த பதிவின். மூலமாக தலைமுடியை பராமரிக்க உதவும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிக்க சில இயற்கையான எளிமையான டிப்ஸ்…
* குளிர்காலத்தில் கூந்தலுக்கு தினமும் எண்ணெய் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
* குளிர்காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடிப்பது தலைமுடிக்கு மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.
* குளிர்காலத்தில் தலைக்கு குளித்து முடித்த பின்னர் தலையை காய வைக்க ஹேர் டிரையர் பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்.
* குளிர்காலத்தில் தலைமுடிக்கு ஹேர் கலர் மற்றும் ஹேர் டே பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
* தலைமுடி ஈரமாக இருக்கும் பொழுது தலையை சேவக் கூடாது. ஏனென்றால் முடி உதிர்தல் அதிகமாகும்.
* அதே போல ஆரோக்கியமான தூக்கம் அவசியம் ஆகும். அதாவது ஒருநாளுக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
* குளிர்காலத்தில் கறிவேப்பிலையை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* குளிர்காலத்தில் பச்சைக் காய்கறி வகைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
* குளிர்காலத்தில் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் செய்வது, ஹேர் கேர்லிங் செய்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.