Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல ஸ்டைலான புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வரும் நீலிமா ராணி!!

சென்னையில் பிறந்த இவர்,தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.சிறுவயதிலேயே தனது கேரியரை தொடங்கிய இவர் தற்போது சின்னத்திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரின் முதல் நாடகம் “ஒரு பெண்ணின் கதை” இந்த சீரியலில் நடிக்கத் தொடங்கிய பின்னர் பல வாய்ப்புகள் இவரைத் தேடி வரத் தொடங்கின.இதனைதொடர்ந்து மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

சீரியல்களில் நடித்துக் கொண்டே இடை இடையில் திரைப்படங்களிலும் தனது பயணத்தை தொடர்ந்த இவர் “நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், பண்ணையாரும் பத்மினியும்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அதிதி இசை என்ற மகள் இருக்கிறாள்.

இப்படியாக சீரியல்,சினிமா,தொகுப்பாளினி மற்றும் தயாரிப்பாளர் என உயர்ந்து நிற்கும் நீலிமா ராணி தற்பொழுது சீரியல்களுக்கு பிரேக் விட்டு சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறாராம்.

அவர் தான் வைத்துள்ள இசை பிக்சர்ஸ் மூலம் “சகோ” என்ற மியூசிக் வீடியோவையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நான் மகான் அல்ல படத்தில் சிறந்த சட்போட்டிங் கேரக்டருக்காக எடிசன் விருதினையும் பெற்றுள்ளார்.

Exit mobile version