வேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!
மழைக்காலங்களில் தான் கொசு அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் எல்லா பருவ நிலைகளிலும் கொசுவின் தொல்லை அதிகமாகவே உள்ளது. இந்த கொசுவை விரட்ட பல விதமான பொருட்கள் இருக்கின்றன. கொசுவர்த்தி, கொசு திரவம், மின்சார பேட், கொசு கடிக்காமல் இருக்க உடலில் தடவும் மருந்து என ஏராளமான பொருட்கள் உள்ளது. இது எல்லாம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இயற்கையான முறையில் கொசுவை விரட்டும் வழிமுறைகளை பார்க்கலாம்.
2 கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 300 மிலி விளக்கெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் அரைத்து வைத்த வேப்பிலையை போடவும். இதை நன்றாக கொதிக்க விட்டு பிறகு அடுப்பை அனைத்து விடவும்.
இது நன்றாக ஆறியதும் வடிக்கட்டிக் கொள்ளுங்கள். இதில் 100 கிராம் கற்பூரத்தை பொடியாக்கி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொண்டு அதன் மூடிப் பகுதியில் திரி போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் திரி அந்த கலவையில் ஊறி விடும். பிறகு எந்த இடத்தில் கொசு மற்றும் பூச்சி தொந்திரவு அதிகம் உள்ளதோ அங்கு இந்த விளக்கை ஏற்றுங்கள். இந்த எண்ணெய் வாசனைக்கு கொசு, பூச்சி என எதுவும் வராது.