வேப்ப இலையில் இவ்வளவு மருத்துவ பயன்களா? நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்

0
248
neem leaf benefits

வேப்ப இலையில் இவ்வளவு மருத்துவ பயன்களா? நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்

வேப்ப இலை கசப்புதான் ஆனால் இதன் மருத்துவகுணமோ எண்ணிலடங்காது. அந்த வகையில் இதன் ஒரு சில மருத்துவ குணங்களை இங்கு பார்க்கலாம்.

வேப்ப கொழுந்து இலையை சாப்பிட பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இரண்டு இலைகளை சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தை வயிற்றில் இருக்கு புழுக்கள் அழிந்துவிடும் பசி நன்கு எடுக்கும்.

பேன் தொல்லை அதிகம் இருப்பவர்கள் வேப்ப இலையை மிக்ஸியில் அரைத்து தலையில் தடவி 5 நிமிடம் கழித்து குளித்து விட பேன் தொல்லை இருக்காது.

வேப்பம் பூவை குழம்பு வைத்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

வெயில் காலத்தில் நாம் குளிக்கும் அரை மணி நேரத்திற்கு முன் தண்ணிரில் வேப்ப இலையை போட்டு குளித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.மேலும் உடலில் கிருமிகளை நெருங்கவிடாது.

குழந்தைங்களுக்கு குளியல் பொடி தயாரிக்கும் போது வேப்ப இலை போட்டு அரைத்தால் குழந்தைக்கு அதை போடும்போது எந்தவித சரும பிரச்சனையும் தோல் சம்மந்தப்பட்ட  பிரச்சனையும் நீங்கிவிடும்.