இந்த வருடத்திற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை! நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பாரா ஆளுநர்?

0
98

மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது.

அதாவது தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் முதல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்தார் இந்த சூழ்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வருடம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்தவுடன் சட்டசபையில் மறுபடியும் நீட்தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கக் கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக தமிழக ஆளுநர் உறுதியளித்திருக்கிறார்.

அப்படியே தமிழக ஆளுநர் ஜனாதிபதிக்கு இன்று மசோதாவை அனுப்பி வைத்தாலும் கூட ஜனாதிபதி இதன் மீது முடிவு எடுப்பாரா? என்பது சந்தேகம்தான்.