நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
நீட் தேர்வு முடிவுகள் ஆனது இன்று வெளிவரவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியது. ஆனால் தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. இந்த நீட் தேர்வு குறித்து அச்சத்தால் பல மாணவர்கள் முன்கூட்டியே தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்ற காரணத்தினால் தங்களின் மருத்துவர் கனவானது பலிக்காமலே போய்விட்டது என நினைத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்களை இழந்து வருகிறோம்.
இம்முறை அவ்வாறு நடக்காதிருக்க தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் மாவட்ட தோறும் மனநல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வின் தோல்வியால் மன உளைச்சலில் உள்ளவர்கள் அந்த மருத்துவர்களை அணுகலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார். தற்பொழுது 564 பேர் அதிக மன உளைச்சலில் இருப்பதை கண்டுபிடித்ததாகவும் கூறினார். அதுமட்டுமின்றி நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 110 மனநல ஆலோசர்கள் கொண்டு ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.