Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்டசபையில் நிறைவேறியது நீட் எதிர்ப்பு சட்ட மசோதா! எதிர்க் கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக மத்திய அரசு அறிமுகப்படுத்திய மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட இது தொடர்பாக திமுக பலகட்ட போராட்டங்களை செய்து வந்தது.அதோடு மட்டுமல்லாமல் நீட் விவகாரத்தில் அமைதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவ்வார்களை அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு இந்த நீட் தேர்வு தொடர்பான பயம் காரணமாக ,தமிழகத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. அதேபோல தற்சமயம் உன்கூட தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வின் பயம் காரணமாக உயிரிழந்திருக்கிறார் .இது தமிழகத்தின் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமானது சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்று தினங்களுக்கு பின்னர் மறுபடியும் இன்றையதினம் கூடியது.

இன்று சட்டசபை கூடிய உடன் நீட் தேர்வு தொடர்பாக ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக என்ற இரு கட்சிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதாவை தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். அந்த சமயத்தில் அவர் உரையாற்றிய போது நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறுவதற்கான புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நுழைவுத் தேர்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் இந்த திமுக அரசு ஆரம்பத்திலிருந்தே நாங்கள் நீட் தேர்வை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றோம் என குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதோடு எங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி எங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வலிமையான சட்ட முன்வடிவை சட்டசபையில் முன்மொழிகின்றேன் என கூறினார்.

இதனை அடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு அதிமுக தன்னுடைய முழுமையான ஆதரவை தருவதாக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அந்த சமயத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளிப்பதற்கும் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், இன்று மதியம் 2 30 மணி அளவில் சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவை ஒருமனதாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம் பாஜக சட்டசபை உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்கள்.

Exit mobile version