NEET PG Exam : நீட் முதுகலை தேர்வானது இந்த ஆண்டு 2 ஷிப்ட்களாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்பிற்கான இளநிலை மற்றும் முதுநிலை நீட் தேர்வுகளை தேர்வு முகமை நடத்துவது வழக்கம். முதுநிலை மருத்துவ படிப்புகள் படிப்பதற்கு நீட் தேர்வானது மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வானது 2 நிலைகளில் பிரித்து நடத்தப்பட்ட பொழுது வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் மீண்டும் அதே போன்று இந்த ஆண்டும் 2 நிலைகளில் முதுநிலை நீட் தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதுநிலை நீட் தேர்வானது அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தமாக 50,000 இடங்களுக்கும் அதிலும் தமிழகத்தில் மட்டும் 4000 மருத்துவ படிப்பதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை நீட் தேர்வு இரண்டு நிலைகளில் நடைபெறுவது குறித்து மாணவர் ஒருவர் முன்னணி அமைச்சர் ஜே பி நட்டாவுக்கு 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் இருந்தபோதிலும் நீட் முதுநிலை தேர்வு இரண்டு ஷிப்டுகளில் நடத்த முடிவு செய்துள்ளது. அதே தவறை ஏன் மீண்டும் செய்ய வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறார்.