நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை!

0
173
NEET exam is very difficult! Student suicide by hanging!

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை!

ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் கோபி. இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இதில் மூத்த மகன் முரளி கிருஷ்ணன் வயது 18. முரளி கிருஷ்ணன் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று படிப்பை முடித்தான். நல்ல மதிப்பெண் பெற்றதால் அவர்களுடைய பெற்றோர் தனது மகன் நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்று நீட் எக்ஸாம் தேர்வில் சேர்த்தனர்.

இதனை முரளி கிருஷ்ணா நீட் எக்ஸாம் போட்டியில் தேர்வுக்காக தேர்வு எழுதினான். அதில் முரளி கிருஷ்ணர் 160 மதிப்பெண் எடுத்து அவர் நீட் தேர்வில் தோல்வியுற்றான். நன்றாக படித்து நல்ல மதிப்பெண் கிடைக்கவில்லை என்று மன வருத்தத்துடன் வருந்தினான். நீட் தேர்வில் தோல்வியுற்றதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மன வருத்தத்தில் இருப்பதைக் கண்ட பெற்றோர் இந்த முறை விட்டுவிடு அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். இதனையடுத்து முரளி கிருஷ்ணன் இந்த ஆண்டு நீட் தேர்வு போட்டியில் தேர்வு எழுதுவதற்கு வீட்டிலிருந்தே படித்து வருவதாக கூறினார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு சென்ற முரளி கிருஷ்ணா அவரது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார். நீண்ட நேரம் மகன் அறைக்குள் இருப்பதைக் கண்டு அவரது பெற்றோர்கள் கதவைத் தட்டி அவரை அழைத்தனர். ஆனால் அவன் எந்த சத்தமும் கொடுக்காமல் அறைக்குள் இருந்தான். இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர்.

அப்போது அறைக்குள் இருந்த முரளி கிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்களது பெற்றோர்கள் கதறி அழுந்து அவரை கீழே இறக்கினர். இது குறித்த தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்

அப்போது போலீசார் அறை முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையின் போது போலீசாருக்கு மாணவன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமாய் இருக்குமா. என்னால நீட்ல நல்லா மார்க் ஸ்கோர் பண்ண முடியல, என்ன மன்னிச்சிடுமா நான் என்னால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணுனேன் ஆனா மெடிக்கல் சீட் வாங்குகிற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண முடியல நான் இந்த முடிவு எடுத்ததற்கு என்ன மன்னிச்சிடுமா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோமா என்று அவன் தனது தாயாருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது எடுத்து மாணவன் உடலை பிரேதப்  பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து சிப்காட் போலீசார் மாணவர் இறப்பு குறித்து தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர். தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கு போட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதிதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.