Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! நீட் தேர்வு பயம் காரணமாக மேலும் ஒரு மாணவி இன்று தற்கொலை என்ன செய்யப்போகிறார் முதலமைச்சர்!

மத்திய அரசால் நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஒரே நுழைவுத் தேர்வாக நீட் நுழைவுத்தேர்வு சென்ற சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது.அப்படிக் கொண்டு வரப்பட்ட இந்தத் தேர்வில் முழுக்க, முழுக்க, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் இந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத ஒரு நிலை இருக்கிறது.

நீட் வருவதற்கு முன்னால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவப் படிப்பிற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் சென்ற சில வருட காலமாக நீட்தேர்வு வந்திருப்பதால் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் கூட எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு கால்பதிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.இதனை தமிழக அரசியல் கட்சிகள் பலவும் எதிர்த்து வருகின்றன. இதற்கு திமுக ஆளுங்கட்சியாக இருந்த சமயத்திலேயே மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சார்ந்த தனுஷ் என்ற மாணவர் நீர் தேர்வு பயம் காரணமாக, தற்கொலை செய்து கொண்டார் .அதோடு நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என கவலையுற்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியான சௌந்தர்யா என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது..ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட்டால் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்து தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு தரப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் தேர்தல் முடிவுற்று வெற்றி பெற்ற பின்னர் கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி தமிழகத்தின் முதல் அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டு இருந்த ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரிவித்து உப்புச்சப்பற்ற திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்து கையெழுத்து போட்டார். ஆனால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட முக்கிய வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து என்ற திட்டத்தை தற்போது வரையில் அவர் செயல்படுத்தவில்லை அதோடு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்ததையும் இதுவரையில் அவர் செயல்படுத்தவில்லை.

இப்படி வாக்குறுதியில் தெரிவித்த மிக முக்கிய அம்ச திட்டங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஏதோ பெயருக்காக ஒரு சில திட்டங்களை மட்டும் நிறைவேற்றி விட்டு தேர்தலில் கூறியதை அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என மார்தட்டிக் கொள்கிறது திமுக அரசு.

Exit mobile version