நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. அதிரடி காட்டிய சிபிஐ!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!!
சமீபத்தில் நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.இந்த நிலையில் இன்று(1.07.2024) இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் மருத்தவ படிப்பில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வினை மாணவர்கள் எழுத வேண்டும் என்பது கட்டயாமாக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு தேவையில்லை என ஒரு சில மாநில அரசுகள் எதிர்த்தன.ஆனால் அதையும் மீறி மத்திய அரசு இதனை செயல்படுத்தி வருகிறது.மாநில பட்டியலில் இருந்த கல்வி பொது பட்டியலுக்கு மாற்றியதால் அனைத்து மாநிலங்களும் இதை ஏற்றுக்கொண்டன.ஆனாலும் தமிழக அரசு தற்பொழுது வரை நீட் தேர்வை எதிர்த்து போராடிகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறின.ஒரு சில தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்தது என மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.மேலும் ஆள்மாறாட்டம் செய்தும் பலர் தேர்வு எழுதியுள்ளனர்.இதனை கருத்தில் கொண்டு அரசு கருணை மதிப்பெண் வழங்கியதும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது அனைத்தும் குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்டு இதுவரை 63 புகார்கள் பெறப்பட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.அதில் ஒரு சில தேர்வு மையத்தில் மட்டுமே இது போன்ற தவறு நடந்துள்ளது எனவும் அதனால் தேர்வை ரத்து செய்யக் கூடாது,மேலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது சிபிஐ-ம் தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.இதன் காரணமக இந்த வழக்கின் இன்றைய விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.