Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் விலக்கு மசோதா! அமைச்சர் பதிலளிக்க மறுப்பு புதிதாக ஏற்பட்ட சர்ச்சை?

neet-exemption-bill-ministers-refusal-to-respond-to-the-new-controversy

neet-exemption-bill-ministers-refusal-to-respond-to-the-new-controversy

நீட் விலக்கு மசோதா! அமைச்சர் பதிலளிக்க மறுப்பு புதிதாக ஏற்பட்ட சர்ச்சை?

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து கேள்விக்கு அமைச்சர் நேரடியாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுது.

வாரணாசியில் நடைபெற்ற இந்த தமிழ் சங்கம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர் தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு ரயில்களும் இதற்காக இயக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதுபோலவே சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு அரசு முதல்வர் மற்றும் அமைச்சர்களும் முறையாக அழைப்பு விடுக்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்து கொள்ளலாம் 3000 பேரை தேர்வு செய்து இலவசமாக அங்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. நீட் விலக்கு கோரி மசோதாவின் நிறைவேற்றி அனுப்பி உள்ள நிலையில் அதன் நிலை என்ன என்று கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்த மன்சுக் மண்டாவியா இது சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சி பற்றிய நிகழ்ச்சி என்றும் அது தொடர்பாக கேள்விகளை கேட்கலாம் என்று பதில் அளித்தார்.

மேலும் நாடாளுமன்றத்தில் அனைத்து விவரங்கள் குறித்தும் விவாதம் நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசு ஒரு மனதாக நிறைவேற்றிய அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து கேள்விக்கு அமைச்சர் நேரடியாக பதில் அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version