NEET: மோடி எதிர்த்து கேள்வி கேட்டால் மைக் ஆப்.. பாஜக-வின் ஆளுமை அதிகாரம்!! வெளியான பரபரப்பு வீடியோ!!
நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் மக்களவையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினாலே அதனை சபாநாயகர் முற்றிலும் மறுத்து வருகிறார்.நேற்று ராகுல் காந்தி தலைமையில் அவரது வீட்டில் இந்தியா கூட்டணி, நீட் தேர்வில் நடைபெற்ற குற்றச்சாட்டு குறித்து மக்களவையில் விவாதம் நடத்துவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேற்கொண்டு இன்று மக்களவையில் இது குறித்து எதிர்க்கட்சி சார்பாக விவாதம் நடத்த கோரி ஒத்துவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள், சபாநாயகரிடம் நீட் தேர்வு முறைகேடு குறித்து கட்டாயம் விவாதிக்க வேண்டும் அதற்குரிய அனுமதி அளிக்குமாறு கேட்டுள்ளார்.ஆனால் சபாநாயகரோ அதனை முற்றிலும் மறுத்துவிட்டார்.
இவ்வாறு அவர் மறுப்பு தெரிவித்ததும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் அனைவரும் கோஷமிட்டு அமலியில் ஈடுபடத் தொடங்கினர்.மேற்கொண்டு சபாநாயகர் ஓம் பிர்லா அவையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.இதே போல மாநிலங்களவையிலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி வழங்கவில்லை.அங்கேயும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் அமலியில் ஈடுபட நேரிட்டது. இதனால் மதியம் 2 மணி வரை அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மீண்டும் மாநிலங்களவை கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் இது குறித்து போராட்டம் நடத்தி வந்ததோடு பிஜு ஜனதா தளம் கட்சியும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.இதனிடையே நீட் தேர்வு முறைகேடு குறித்து கேள்வி எழுப்பினால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எவ்வாறான எதிர்ப்புகள் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், நீட் முறைகேடு குறித்து ராகுல் காந்தி அவர்கள் கேள்வி கேட்கும் பொழுது அவரது மைக்கானது ஆப் செய்யப்படுகிறது.இதுகுறித்து சபாநாயக்கரிடம் மைக்கை ஆன் செய்யும்படி கேட்டபொழுது, அது எதுவும் என் கையில் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
அதேபோல உங்களுடைய விவாதம் குடியரசுத் தலைவர் சொல்வதன் உரையில் தான் இருக்க வேண்டுமே தவிர மற்ற தரப்பு எதுவும் இங்கு பதிவு செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.இவர் சொல்வதை வைத்து பார்க்கையில், குடியரசு தலைவர் கூறும் உரை மீதான விவாதம் செய்யப்படும்போது தான் மைக் ஆன் ஆகும் என்றும் மோடியை எதிர்த்தோ அல்லது அவர் சம்பந்தப்பட்ட எதனையும் கண்டிக்கும் பொழுது மைக் ஆப் செய்யப்பட்டு குரல் ஒடுக்கம் செய்யப்படும் என அவர்களது ஆளுமையை காட்டுவது போல் உள்ளது.இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.