Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு!

NEET Result ! The tragic decision taken by the student!

NEET Result ! The tragic decision taken by the student!

நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு!

மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட குறைவு. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் லக்சனா ஸ்வேதா(19) இவர் நீட் தேர்வு எழுதி உள்ளார்.

தேர்வில் இவர் தோல்வி அடைந்துள்ளார்.அதனால் மனவேதனையில் இருந்த லக்சனா ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version