Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் அலட்சியம்! 13 பேருக்கு கொரோனா உறுதி!

கொரோனா வீரியம்  தெரியாமல் சீட்டு விளையாடிய 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக சென்னை திகழ்கிறது. இங்கே பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,927 ஆக உள்ளது. இதில், 12 691 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல, 13,188 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தவர்களின் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 260. நாள் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் கொரோனா  பாதிப்பு  நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் அதிகபட்சமாக 1,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கும் உறுதி செய்யப்பட அங்கே  பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக சென்னையில் முழுஉரடங்கை  அமுல்படுத்த  தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில்  சென்னை தியாகராய நகர் தர்மபுரம்  என்னும் பகுதியில் ஏற்கனவே ஐந்து பேர் கொரோனாவால்   பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  அதே பகுதியில் இருக்கக்கூடிய பக்கத்து வீட்டில் உள்ளவர்களில்  கிட்டத்தட்ட 13 பேர் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடியுள்ளனர். கொரோனா  வீரியம் தெரியாமல் அவர்கள் விளையாடியதன் விளைவு 13 பேருக்கும் கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version