Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா தொற்றால் கோவிலை கண்டைன்மெண்ட் ஜோனாக அறிவிக்க பேச்சுவார்த்தை..!

விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில் ஈ.ஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா கனகதுர்கா ஆலயம் பொதுவாக பக்தர்கள் நிறைந்து காணப்படும். ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோவிலை மூடி வைத்திருந்த அதிகாரிகள் தற்போது மத்திய அரசு அறிவித்த தளர்வுகளோடு மீண்டும் தரிசனத்தை ஆரம்பித்ததுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்த தளர்வின் காரணமாக முதலில் ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அறிவித்திருந்தனர். பின்னர் அதிலும் கொரோனா வைரஸ் பரவியதால் அந்த எண்ணிக்கையை மீண்டும் குறைத்தனர். இந்நிலையில் அண்மையில் கோவில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் 18 ஊழியர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக பரிசோதனைகள் தெரிவித்துள்ளன.

நேற்று சிராவண மாத வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் பிரத்தியேக பூஜைக்காக வந்திருந்ததால் கொரோனா அச்சம் மேலும் பெருகியது. என்னதான் கொரோனா வைரஸ் பரவல் கோவிலில் அதிகமாக இருந்தாலும் பக்தர்களின் வரவு மட்டும் குறையவே இல்லை.

கொரோனா தொற்று பயத்தின் காரணமாக அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல், பக்தர்களை திருப்பி அனுப்ப முடியாத சூழலில் தரிசனம் நடத்தி வருவதாக தெரிகிறது.

அதிகாரிகளோடு உடன் இருக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா பரவியிருப்பதால் கோவிலை கண்டைன்மெண்ட் ஜோனாக அறிவிக்கும் விஷயம் குறித்து அரசாங்கத்தோடு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version