நெல்லை கண்ணன் கைது – பாஜகவினரால் தாக்கப்பட்டதாக தகவல்???

0
131

நெல்லை கண்ணன் கைது – பாஜகவினரால் தாக்கப்பட்டதாக தகவல்???

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நெல்லை கண்ணன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்று நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மோடி, அமித் ஷா ஆகியோரைக் கடுமையாக விமர்சித்த நெல்லை கண்னனை உடனடியாகக் கைது செய்யக் கோரி தமிழக பா.ஜ.கவினர் போர்க்கொடி தூக்கினர்.

அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பா.ஜ.க சார்பில் சென்னை மெரினா காந்தி சிலை முன்பாக  போராட்டமும் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணத்தால் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் அவர் திருவனந்தபுரம் தப்ப முயன்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் சில முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பில  பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். 

இதையடுத்து நெல்லை கண்ணனை  கைது செய்ய  முயன்றபோது அவர் வர மறுத்தால் , அவரை போலீசார் போலீஸ் வேனுக்கு இழுத்து  சென்றனர்.  அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள்  நெல்லை கண்ணணை  சரமாரியாக தாக்கினர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் திருநெல்வேலிக்கு அழைத்து செல்லப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப்பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.