Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

#image_title

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மோர், கம்மங்கூழ்,தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் கிடைக்கும் முந்திக் கொள்ளாதீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும்போது பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே நுழைந்து வாங்கிதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதனால் கடும் தள்ளுமுள்ளுக்குள் பொதுமக்கள் சிக்கித் தவித்தனர். இதையடுத்து பொறுமை காக்காத சிலர் நீர்மோர் பந்தலின் பின்புறம் கைகளை உள்ளே விட்டு குளிர்பானங்களை எடுத்துச் சென்றனர்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் இருந்து வெளியே வருவதற்குள் படாத பாடுபட்டார்.

Exit mobile version