பக்க வாதத்தை கட்டுப்படுத்தும் அற்புத டீ! வாதம் உடலை விட்டே விலகும்
நம் உடலில் பொதுவாக வாதம், பித்தம், கவம் ஆகிய மூன்றும் சமமான முறையில் இருக்க வேண்டும். இந்த மூன்றில் எதாவது ஒன்று அதிகமாக இருந்தாலும் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் வரும்.
இதில் முக்கியமானது வாதம் ஆகும். இந்த வாதம் என்பது சரியான முறையில் இல்லை என்றால் நம் உடலில் ஒரு கை ஒரு கால் செயல்படாமல் போகக்கூட வாய்ப்பு உள்ளது. வாதம் நம் உடலின் உச்சி முதல் பாதம் வரை உள்ள நரம்புகளில் இருக்கும். நம் உடலில் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, ஏப்பம் போன்றவை இருந்தால் ஆரம்பக்கட்டதிலேயே கவனிக்க வேண்டும். இல்லையென்றால் வாதம் நம் உடலுக்கு மிகப் பெரிய பிரச்சனையை கொடுக்கும்.
இப்படி மிகப் பெரிய பிரச்சனையை கொடுக்கும் வாதத்தை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள இந்த முறையில் டீ செய்து குடித்து வந்தால் வதாமானது கட்டுக்குள் இருக்கும்.
வாதத்தை கட்டுப்படுத்தும் டீ செய்ய தேவையான பொருள்கள்
சதைக் குப்பை – 2 டீஸ்பூன்
பூண்டு – 10 கிராம்
கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்
ஓமம் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 3 டம்ளர்
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து முதலில் மூன்று டம்ளர் தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் சூடாகும் பொழுது சதைக் குப்பை, தோல் உரித்து தட்டப்பட்ட பூண்டு, ஓமம், கருஞ்சீரகம் எல்லாற்றையும் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
மூன்று டம்ளர் தண்ணீர் வந்து ஒரு டம்ளராக ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி எடுத்து அதை குடிக்கலாம். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது போல தொடர்ந்து பத்து நாள் குடித்து வந்தால் நரம்புகளில் உள்ள வாதம் வெளியேறும்.
நாள்பட்ட வாதம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் இதை தினமும் செய்து குடிக்கலாம். பத்து நாள் என்று அளவு இல்லை.
காலையில் வெறும் வயிற்றில் குடிக்க முடியவில்லை என்றால் தினமும் இரு வேலை குடிப்பது போல வைத்துக் கொள்ளலாம். இதை செய்வதால் வாதம் நரம்பை மட்டுமில்ல நம் உடலை விட்டும் வெளியோறும்.