Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று ஜன. 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

netaji subhas chandra bose birthday

netaji subhas chandra bose birthday

இன்று ஜன. 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

இந்திய மக்களால் நேதாஜி என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் வீரத்துடன் போராடியவரான இவர் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேதினத்தில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர போராட்ட வீரரான இவரது குடும்பம் ஏறக்குறைய 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத் தலைவர்கால், அரசவையில் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க வரலாற்று மரபு வழியைகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாய் பிரபாவதி தேவி ‘தத்’ என்ற பிரபுக் குலத்தை சார்ந்தவர். இவரது குடும்பம் 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்டது.

சுபாஷ் சந்திரபோஸ் இக்குடும்பத்தில் ஒன்பதாவதுவாரிசாக பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய், தந்தையரை விட தன்னை கவனித்து வளர்த்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் ஈடுபாட்டுடன் இருந்தார்.

இதனையடுத்து ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எமிலியை காதலித்து, 1937 டிசம்பர் 27 ஆம் ஆண்டில் ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு 1942 ஆம் ஆண்டில் அனிதா போஸ் என்ற ஒரு மகள் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் சிறையில் அடைபட்டு கிடந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். இதன் மூலமாக அப்போது நமது இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை காக்கஅவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இந்நிலையில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று தைவான் நாட்டில் நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாககூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கும் பல்வேறு சான்றுகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970 களில் அங்கேயே இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 ஆண்டு வாக்கில் இறந்துவிட்டதாகவும் அவரது இறப்பு குறித்துபல்வேறு கருத்துக்கள்நிலவுகின்றன.

இந்நிலையில் 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தைவானில் எந்த விமான விபத்தும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது அவர் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு ஆதாரமாக திகழ்கிறது. இதனையடுத்து இவர் இறப்பு குறித்து விசாரிக்க இந்திய அரசால் நியமிக்கப்பட்ட முகர்ஜி கமிஷன் இதைப்பற்றி விசாரித்து, நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசோஅந்த அறிக்கையை ஏற்கவில்லை.

1992 ஆண்டில் சுபாஷ் சந்திரபோஸுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரது இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் திரட்டி தர முடியவில்லை இதனால் உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.

Exit mobile version