Erode By Election: ஈரோடு இடைத்தேர்தல் ஓவ்வொரு தலைவர்களையும் காவு வாங்கி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழர்கள் பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவிலானது அரசியல்வாதிகளுக்கு ஆகாத ஒன்றாகவே இருக்கிறது. தினசரி 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலை கண்டு களித்து செல்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்கள் யார் இந்த கோயிலுக்கு சென்று வந்தாலும் மரணம் அல்லது அவர்களின் பதவி பறிபோகும் என்ற நம்பிக்கை ஒன்று உலாவி வருகிறது.அந்த வகையில் இந்த கோவிலுக்குள் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங் என தொடங்கி கருணாநிதி வரை பலருக்கும் பதவி பறிபோகி உள்ளது.
இதனை அறிந்து பல வருட காலமாக கோவில் சார்ந்த விழாக்கள் ஏதும் நடத்தப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு அக்கோவிலின் அருகில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற பொழுது அமைச்சர் கே என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவிலை காண்பித்து இதற்குள் செல்ல மாட்டேன் என கேலி கிண்டலாக பேசிய வீடியோ மிகவும் வைரலானது.
அதே போல தான் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும், தொடர் பதவி வகிப்பவர்கள் உயிரிழந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வகையில் தேர்தலில் நின்று வெற்றி பெறுபவர்கள் ஓரிரு வருடங்களிலே அவர்களின் பதவி அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற வதந்தி பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் தற்போது நடக்கப்போகும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் யாரை காவு வாங்கப் போகிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.