நெல்லையில் ஜாகிர் உசேன் படுகொலை சம்பவம் தான் சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டதை மேற்கொண்டு உறுதி செய்துள்ளது. தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் உயிருக்கு அச்சுறுதல் உள்ளதாகவும் பலமுறை உசேன் போலீசாரிடம் கூறியும் இது குறித்து வீடியோ பதிவிட்டும் அவருக்கும் முறையான பாதுகாப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவர் சாமானிய மக்களை கடந்து கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவரின் தனிப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர்.
தற்பொழுது ஓய்வு பெற்ற நிலையில், நில தகராறு சம்பந்தமாக பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வப்பு வாரியத்தின் நிலத்தை மீட்டு ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு கொடுத்துள்ளார். இதற்கு முன் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர்கள் கோபமுற்று இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது ரீதியாக அவர் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குப் பின்னணியில் சில போலீஸ் கைக்கூலிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான் இன்று தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி வீழ்த்தியுள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சி உள்ளிட்டோர் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்துள்ளனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு இப்படிப்பட்ட சூழல் என்றால் சாமானிய மக்கள் புகாரையெல்லாம் காவல்துறை என்ன செய்யும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவர் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறிய போதே உரிய பாதுகாப்பு அல்லது நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காது என பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவரை கொலை செய்த பிறகே முதல்வர், நாங்களெல்லாம் இது ரீதியான நடவடிக்கை எடுத்தோம் என அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லையென இணையவாசிகள் தங்களது கொந்தளிப்பை கொடுத்து வருகின்றனர்.