மத வெறியை தூண்டிய நெட்டிசன்கள்.. தரமான பதிலடி கொடுத்த இர்ஃபான்..!!
திரைப்பிரபலங்களை விட சோசியல் மீடியா பிரபலங்களுக்கு தான் இங்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தனது யூடியூப் சேனல் மூலம் ஏராளமான ஃபாலோயர்களையும் ரசிகர்களையும் தன்வசம் வைத்திருப்பவர் தான் சோசியல் மீடியா பிரபலம் இர்ஃபான். இவரை ஒரு Food Reviewer அதாவது உணவு விமர்சகர் என்று கூறலாம்.
பெரிய பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய கடைகள் வரை சென்று உணவை ருசித்து பார்த்து அதுகுறித்து இவரின் யூடியூப் சேனலில் வீடியோவாக பதிவு செய்வார். இவரின் வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் அந்த ஹோட்டல்களுக்கு செல்வார்கள். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இர்ஃபான். யூடியூபில் இவரை 37 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
அதில் சில பிரபலங்களும் அடக்கம். தற்போது இவரும் பிரபலமாக மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். ஆம் யூடியூப் மூலம் கிடைத்த புகழ் காரணமாக இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இர்ஃபான் போட்டியாளராக பங்கேற்க உள்ளார். இந்த சூழலில் இவர் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
அதாவது இர்ஃபான் 99% முஸ்லீம் கடைகளுக்கு மட்டுமே ரிவ்யூ செய்து வருவதாகவும், 1% தான் இந்து கடைகளுக்கு ரிவ்யூ செய்து வருகிறார் எனவும் மத வெறியை தூண்டும் விதமாக சிலர் கமெண்ட் அளித்திருந்தனர். அதனை கண்ட இர்ஃபான் அதற்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
அதன்படி இர்ஃபான் கூறியிருப்பதாவது, “அது எப்படிடா என் மதத்தை சேர்ந்தவர் கடை பேர் இருந்தா மட்டும் அங்க வந்து நொட்டுறீங்க? என கூறி அவர் ரிவ்யூ செய்த இந்துக்கள் கடையின் பெயர்களை தெரிவித்துள்ளார். அதேபோல் பிரச்சனை என்கிட்ட இல்லடா பரதேசி எல்லாத்தையும் மதவெறியா திணிக்கிற உன்கிட்ட தான்டா இருக்கு செங்கல் சைகோ” என கூறியுள்ளார்.