Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் புதிய திட்டம் தொடக்கம்! நாடாளுமன்றத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இயற்கை எரிவாயு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கினார்.

அதில் சிஎன்சி என்றழைக்கப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநகரை எரிவாயு விநியோக அமைப்புகளை நிறுவி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 8181 இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் சென்ற டிசம்பர் மாதம் 31ம் தேதி வரையில் 3622 நிலையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

அதோடு மாநில வாரியாக நிறுவப்பட்டிருக்கின்ற இயற்கை எரிவாயு மின் நிலையங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் தமிழ்நாட்டில் 890 நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதில் 68 நிலையங்கள் தற்போது வரையில் நிறுவப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

Exit mobile version