Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பரிந்துரை செய்த உச்சநீதிமன்றம்! குடியரசு தலைவர் செய்த புதிய நியமனம்!

உச்ச நீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட ஒன்பது பேரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகள் பதவிகள் இருக்கின்றன. தற்சமயம் அதில் இருபத்தி நான்கு நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான உச்சநீதிமன்ற கொலிஜியம் நடவடிக்கை மேற்கொண்டது.. தலைமை நீதிபதி தீவிரமான தலைமையிலான கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு 9 நீதிபதிகள் கொண்ட பட்டியலை பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் புதிதாக ஒன்பது நீதிபதிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்திருக்கிறார். கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபௌட் சீனிவாஸ் ஓகா,குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உபேந்திர குமார், மகேஸ்வரி, தெலுங்கானா உயர்நீதிமன்ற சீமா கோரி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பெங்களூரு வெங்கட்ராமன், நாகரத்னா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுடலை தேவன், ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்எம் சுந்தரேஸ்வரர், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி திரிவேதி மற்றும் வழக்கறிஞர் பமிடி காந்தம், ஸ்ரீ நரசிம்மா உள்ளிட்டோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நியமனத்தின் மூலமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்திருக்கிறது. இன்னும் ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக இருக்கிறது.

Exit mobile version