இந்தியா-சீனா எல்லை எல்லைப் பிரச்சனையை தடுக்க புதிய ஒப்பந்தம்!

0
101
New agreement to prevent India-China border problem!

இந்தியா சீனாவுடன் 3,488 கிலோமீட்டர் தூரத்தை எல்லையாக பகிர்ந்து வருகிறது. இந்த எல்லையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம், அந்த வகையில் மேற்கு எல்லை பகுதியாக ஜம்மு மற்றும் காஷ்மீர், மத்திய எல்லை பகுதிகளாக  இமாச்சல பிரதேசம்,உத்தரகண்ட், கிழக்கு பகுதிகளாக சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே இதுவரை முழுமையான எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்தியா மேற்கு பகுதியில் உள்ள  அக்ஸாய் சீனா மீது உரிமை கோருகிறது. சீனா கிழக்கு எல்லை பகுதியில் உள்ள  அருணாச்சல பிரதேசத்தை உரிமை கோருகிறது. இப்படியாக இவ்விரு நாடுகளுக்கு இடையில் பல ஆண்டுகளாக  தீராத எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. 1962 ஆம் ஆண்டு இமய மலையில் உள்ள  பாங்காங் சோ ஏரிக்கு உரிமையை  கோரி சீனா தனது முதல் தாக்குதலை இந்தியா மீது நடத்தியது.

கல்வான் பள்ளத்தாக்கு சர்ச்சை, 2017 ஆம் ஆண்டு டோக்லாம் தொடர்பாக  இந்தியா-சீனா மோதல் 70-80 நாட்கள் நீடித்தது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதி தங்களுக்கு சொந்தம் என்று சீனா சர்ச்சை கிளம்பியது வரை எல்லை தொடர்பான பிரச்சனை நீண்டு வருகிறது. கடந்த 2020-ம் வருடம் டோக்லாம் பகுதியில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் புகைப்படத்தை  சீனா 20221ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சையை தீர்க்க பல கமிட்டிகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவின் காஷான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக திங்களன்று ‘துருப்புகளின் ரோந்து பணி ஒப்பந்தம் “செய்ய இந்தியா முடிவு எடுத்து உள்ளது. இதனால் இந்தியா-சீனா எல்லை பதற்றம் குறையும் என நம்பப்படுகிறது.