Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை !!

#image_title

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை

பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக கட்சி தமிழகத்தின் மேலும் பலப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த பிறகு கட்சி மூன்று, நான்காகப் பிளவுபட்டது. ஓபிஎஸ் ஒரு தரப்பும், தினகரன் ஒரு தரப்பும், எடப்பாடியார் ஒரு தரப்பும், ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபா ஒரு பக்கமும், திவாகரன் ஒரு பக்கம் எனப் பலவாறு கட்சி பிளவுபட்டது. தற்போது அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் கூட.

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெரும் நம்பிக்கை மக்களுக்கு வந்தது. ஆனால் அந்த நம்பிக்கையைப் பாதிதான் திமுக அரசு நிரூபித்துள்ளது.கட்சியில் முக்கிய பதவிகளுக்குக் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்கள், கட்சிப் பணி ஆற்றுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல், பதவியும் வழங்காமல் பணபலம் உள்ளவர்களுக்கு மட்டும் திமுக கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக கட்சியில் இருக்கும் தொண்டர்களை, திமுக நிர்வாகிகள் மதிப்பதில்லை என்றும் பேசப்படுகிறது. இதனால் திமுக கட்சியிலிருந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக கட்சியில் இணையும் நிகழ்வு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

திமுக மட்டும் இல்லாமல் காங்கிரஸ், பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி பலப்படும் என்றும் அதிக தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version