இன்னும் ஒரு நாள்தான் இருக்கு:? பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு?

0
125

தமிழகத்தின் பள்ளி பொதுத்தேர்வுகள் தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் சில தேர்வுகள் மட்டுமே எழுத முடியாமல் போனது.அந்த எழுத முடியாமல் போன தேர்வை மறுத்தேர்வு வைத்து அதன் விடைத்தாள்களை திருத்தி பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மற்றும் மறுதேர்வின் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

தற்போது தமிழக அரசு தேர்வுகள் துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளவாறு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற திங்கட்கிழமை ( 10ஆம் தேதி ) பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட இருக்கின்றன. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இனியத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும்
அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.

மேலும் மாணவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் மதிப்பெண்கள் அனுப்படும் என்றும் கூறியுள்ளது.வருகின்ற 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் அவர்களது பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதிப்பெண் சார்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவர்கள் பயிலும் பள்ளிகள் மூலம் குறைதீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று தேர்வு கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.