Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யாரும் தப்ப முடியாது! தமிழக அரசு எடுக்கப்போகும் அடுத்த அதிரடி நடவடிக்கை!

பதிவு துறைகளில் நடைபெற்று வருகின்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி நேற்றையதினம் அறிவித்திருக்கிறார். சட்டசபையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அந்த சமயத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிடும் விதமாக அமைச்சர் மூர்த்தி உரையாற்றி இருக்கிறார்.

அந்த சமயத்தில் கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர், செங்கல்பட்டு, விருதுநகர், உள்ளிட்ட பகுதிகளில் புதிய நிர்வாக கூட்டங்கள் வணிகவரி துறையின் சார்பாக ஏற்படுத்தப்படும் என தெரிவித்திருக்கிறார். அதோடு வணிகவரி துறையின் சேவைகள் எல்லாம் தமிழில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

சட்டவிரோதமாக போலி பட்டியல் தயார் செய்யும் நபர்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்ற வகையில் சட்டத்திருத்தம் முன்னெடுத்து அது சட்டசபையில் நிறைவேற்றப்படும் என சொல்லப்பட்டு இருக்கிறது. வரிஏய்ப்பு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை போலீசாரின் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவின் மூலமாக முன்னெடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.

வணிகவரித் துறையில் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை 3.86 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும் தாமதமாக வரி செலுத்துவோர் ஒன்லி டோடை தொடர்ச்சியாக வலியுறுத்துவதற்கான புதிய கால் சென்டர்கள் உண்டாக்கப்படும். திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருவாரூர், திருவள்ளூர், உள்ளிட்ட வருவாய் மாவட்டங்களின் தலைமை இடங்களில் 5 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் உறுதி அளித்திருக்கிறார். அத்தோடு சென்ற ஆட்சிக் காலங்களில் பதிவுத் துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்தப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர்.

திருவண்ணாமலை, திண்டிவனம், கிருஷ்ணகிரி, போன்ற மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு மற்றும் 26 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் பதிவுத்துறை சார்ந்த சொந்தமான இடங்களில் 41.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு கட்டடங்கள் கட்டி தரப்படும்.

தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், உதவி பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு புதிதாக 50 வாகனங்கள் வழங்கப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.

எல்லாப் பதிவாளர் அலுவலகத்திலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக அந்த அலுவலகங்களில் இருக்கின்ற பதிவு அறையில் இணைய நெறிமுறை புகைப்பட கருவிகள் 5.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளை நேற்றையதினம் அமைச்சர் மூர்த்தி வெளியிட்டிருக்கிறார்.

Exit mobile version