நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

0
214
New change in fair price stores!! Start in Kanchipuram!!

நியாயவிலை கடைகளில் புதிய மாற்றம்!! காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலைகளிலும் கிடைகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளின் மீது வரும் புகார்களை தடுக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது.

அதேபோல் குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவை ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். இந்நிலையில் புது முயற்சியாக நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு யுபிஐ (UPI) முறையில் அதாவது கியூ ஆர் கோடு (QR CODE) மூலமாக பணம் செலுத்தலாம். நீண்ட காலமாக யோசைனையில் இருந்த இந்த திட்டம் இப்பொழுது செயல்படுத்தப் படுகிறது.

நியாயவிலை கடைகளில் ரொக்க பரிவர்த்தனைகள் மட்டுமே இருந்த நிலையில்,  இந்த யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை மக்களுக்கு வசதியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த யுபிஐ பணம் செலுத்தும் முறையை தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம், டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் நியாயவிலை கடையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர், மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் இணைப்பதிவாளர், மற்றும் மேலாண்மை இயக்குநர் என பலரும் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நியாய விலை கடைகளிலும் இந்த முறை செயல்படுத்தப் படுகிறது. இனி பொதுமக்கள் ரொக்க பரிவர்த்தனைகள் செய்யாமல், யுபிஐ முறையை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம்.