ஆன்லைன் கட்டணத்தில் புதிய மாற்றம்! மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம்!

0
185
New change in online payment! Aadhaar number is mandatory to pay electricity bill!

ஆன்லைன் கட்டணத்தில் புதிய மாற்றம்! மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம்!

தமிழகம் மின்வாரியம் ஆனது நுகர்வோர்களுக்கு ஓர் புதிய தகவலை வெளியிட்டது.அதில் நுகர்வோர்கள் கட்டாயம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது. ஒரே பெயரில் ஒன்று அல்லது மேற்பட்ட இணைப்புகள் வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனென்றால் 100 யூனிட் இலவச மானியம் மின்சார வழங்குவதில் ஒழுங்கு முறையை கொண்டு வர இதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

அதேபோல வாடகை வீட்டில் இருப்பவர்களும் அவர்களின் ஆதார் அட்டையை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். அந்த வகையில் தற்பொழுது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்தும் வகையில் கட்டமைப்புகளை மாற்றி வைத்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் நுகர்வோர்கள் அவதிப்படுவதாக கூறியுள்ளனர்.

அந்த வகையில் இலவச மானியம் மின்சாரம் பெறுபவர்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறி இருந்தனர். இந்நிலையில் அதற்கான இணையதள பக்கத்தையும் வெளியிட்டனர். ஆனால் இந்த தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஒரு கால வரையறை ஏதும் கூறவில்லை.தற்பொழுது மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த முன் வரும் பொழுது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கட்டணம் செலுத்த இறுதி நாளான இன்று ஆதார் எண் இணைப்பை செலுத்தினால் தான் கட்டணம் கட்ட முடியும் என்று இருக்கும் நிலையில் தற்பொழுது ஆதார் அட்டை இணைப்பு எங்களுக்கு அலைச்சலை ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.குறிப்பாக ஆன்லைனில் கட்டணம் செலுத்த முற்படும் போது மட்டும் தான் இவ்வாறான இணைப்பு கேட்பதாகவும்,நேரடியாக சென்று மின் கட்டணம் செலுத்தும் போது இவ்வாறு கேட்பதில்லை என்றும்  கூறியுள்ளனர்.