மிகவும் குறைவான செலவில் கொரோனா பரிசோதனை… சலைவா டைரக்ட்!!

0
106

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, தற்போது மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருந்து சளி மாதிரிகள் குச்சியை விட்டு துடைத்து எடுப்பதால் எரிச்சலும், புண்களும் ஏற்படுகின்றது. இதனை எளிய முறையில் நேரடியாக பரிசோதனை செய்ய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிதளவில் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. மேலும் இதனால் நாட்டின் பொருளாதாரமும் மனிதர்களின் வாழ்வாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தற்போது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனையின் போது, நோயாளியின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு அதன் மூலம் வைரஸ் தொற்று இருக்கிறதா என்று உறுதி செய்யப்படுகிறது.

இந்த பரிசோதனையின் முடிவை தெரிந்துகொள்வதற்கு சுமார் 48 மணி நேரம் ஆகிறது. மேலும் தனியார் மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.3,500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரிகள் குச்சியை விட்டு துடைத்து எடுப்பதால் எரிச்சலும், புண்களும் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் யேல் பல்கலைகழகம் “சலைவா டைரக்ட்” எனப்படும் புதிய வகை கொரோனா மருத்துவ பரிசோதனையை உருவாக்கி உள்ளது. இந்த பரிசோதனையில் ஒரு மைக்ரோ லிட்டர் எச்சிலில் 6 முதல் 12 வைரஸ்கள் இருந்தால் கூட கண்டறிய முடியும். இது தற்போது செய்யப்படும் பிசிஆர் பரிசோதனையை விட 93 சதவீதம் துல்லியமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான செலவும் குறைவானதே என்றும் தெரிவித்துள்ளனர்.