தமிழகத்திற்கு வந்த புதிய ஆபத்து! மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா? வெளியான பரபரப்பு தகவல்!

0
111

நோய்த்தொற்றின் 3வது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்திருக்கிறது. அதோடு மத வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. அதேபோன்று பள்ளிகளும், திறக்கப்பட்டனர். இதற்கு நடுவில் தென்னாப்பிரிக்காவில் நியோகோ என்ற புதிய வகை நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நோய் தொற்று பரவல் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எனவும், விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தற்சமயம் மகாராஷ்டிரா டெல்லி போன்ற பகுதிகளில் நேற்று பாதிப்பு குறைந்திருக்கிறது ஆகவே பொதுமக்கள் புதிய வகை நோய் தொற்று பரவல் தொடர்பாக அச்சம் கொள்ளத்தேவையில்லை அதேபோன்று நோய் தொற்று 3வது அலையால் அதிக அளவில் வயதானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நோய்த்தொற்று அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் குறைய ஆரம்பிக்கும் ஆகவே பொதுமக்கள் எல்லோரும் நோய்தொற்றுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று தெரிவித்திருக்கிறார்.

செங்கல்பட்டு சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நோய் தொற்று பாதிப்பு சற்றே குறைந்திருக்கிறது. ஆனாலும் நோய் தொற்று பாதிப்பு கேரள மாநில எல்லைப் பகுதியில் இன்னமும் குறையவில்லை.

ஆகவே அங்கே இருக்கக்கூடிய பொது மக்கள் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும், தெரிவித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன். அதேபோல நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருந்தால் மிக விரைவில் ஊரடங்கு கடுமையாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.