யுஜிசியின் புதிய விளக்கம்! ஆன்லைன் பட்டங்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை!
பல்கலைக்கழக மானிய குழு தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ஆன்லைன் ,தொலைதூர கல்வி ,நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெரும் பட்டங்களுக்கு இடையே இந்த வேறுபாடும் இல்லை எனவும் கூறியுள்ளது.மேலும் அனைத்து டிகிரி பட்டங்களும் ஒரே மதிப்புதான் எனவும் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றனர்.அதன் அடிப்படையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ,பல்கலைகழக மானியக்குழு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.மேலும் பாடத்திட்டம் ,கற்பிக்கும் முறை ,பல் நுழைவு வெளியேறுதல் ,விருப்பதெரிவு அடிப்படையில் தரமதிப்பீடு அமைப்பு முறை போன்ற முன்னெடுப்புகளும் அதில் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.