ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய குடிநீர் கட்டணம்! 5 சதவீதம் முதல் 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது!

0
224
New drinking water fee effective from April! Raised from 5 percent to 10!

ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய குடிநீர் கட்டணம்! 5 சதவீதம் முதல் 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது!

சென்னையில் மொத்தம் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளது.மேலும் சென்னை குடிநீர் வாரியம் சார்ப்பில் 15 மண்டலங்களிலும் லாரி மற்றும் பைப் மூலமாக நாளொன்று 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யபடுகின்றது.அதுமட்டுமின்றி ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீருடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக தினசரி குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஆண்டு தோறும் மொத்தம் ரூ 885 கோடி வருவாய் கிடைக்கிறது இதில் குடிநீர் கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் மூலம் ரூ 505 கோடி மற்றும் மற்ற உள்ளாட்சிகள்,தொழிற்சாலைகள்,லாரி குடிநீர் வழியாக ரூ 380 கோடியும் பெறப்படுகின்றது.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இரண்டாம் அரையாண்டு என மக்களிடம் வரி மற்றும் கட்டணம் வசூல் செய்யபடுகின்றது.

மேலும் வீடுகளுக்கு குடிநீர்,கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் ஏழு சதவீதமும்,கட்டணமாக மாதம் 80 ரூபாயாக வசூல் செய்யப்பட்டு வருகின்றனர்.ஆனால் அதே சமயத்தில் வணிக கட்டிடங்களுக்கு இந்த கட்டணம் வேறுபடும்.குடிநீர்,கழிவு நீர் இணைப்பு வழங்க விரிவாக்க பகுதிகளில் வரி மட்டும் வசூல் செய்யபடுகின்றது.

கடந்த 2019-20 ஆம் ஆண்டுகளில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் 5 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 10 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.ஆனால் கடந்த 2020-22 வரை கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் எந்த ஒரு கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டில் வீடுகளுக்கு ஐந்து சதவீதமும்,வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பத்து சதவீதமும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டணம் உயர்வு வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகின்றது.இந்த கட்டணம் உயர்வினால் ஆண்டுக்கு ரூ 30 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இனி ஒவ்வொரு ஆண்டும் இதே சதவீதத்தில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறையின் படி வீடுகளுக்கு குடிநீர் கட்டணமாக மாதம் ரூ 80 வசூல் செய்யபடுகின்றது.

ஏப்ரல் மாதம் முதல் ரூ 84 வசூல் செய்யப்படும்.வீடுகளுக்கு லாரியில் வழங்கப்படும் குடிநீர் கட்டணம் 6ஆயிரம் லிட்டர் ரூ 475 க்கு வழங்கப்பட்டு வருகின்றது அவை இனி ரூ 499 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்களுக்கு லாரியில் வழங்கப்படும் குடிநீர் 6 ஆயிரம் லிட்டர் ரூ 700 க்கு வழங்கபடுகிறது.ஆனால் இனி அவை ரூ 770 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.