கொரோனா வைரஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய எரிசக்தி மூலப்பொருள்:?

0
133

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மருத்துவர்கள், விஞ்ஞானிகளை பாதுகாக்க பயன்படும் பிபிஇ என்னும் தனிநபர் பாதுகாப்பு உடைய பயன்படுத்தி வருகின்றனர்.இதனை பயன்படுத்திய பின்பு மீண்டும் உபயோகம் செய்யாமல் இதனைமருத்து கழிவாகவே அகற்றப்படுகிறது.இதனாலும் கூட கொரோனா வைரஸ் பரவலுக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் போன்ற மூலப் பொருட்களில் தயாரிக்கப்படுவதால் இதனை புதைக்கவோ எரிக்கவோ இயலாத ஒன்று.

பிபி இ உடையானது நெய்யப்படாத பாலிபுரொபிலின் என்ற பிளாஸ்டிக் பொருள் மூலம் தயாரிக்கப்படுகிறது.மனித கவச உடையாக தற்போது பயன்பட்டு வருகிறது.இந்த உடையை எரிபொருளாக பயன்படுத்தலாம் என இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பெட்ரோலுக்கு நிகரான எரிசக்தியை இந்த உடையை எரிக்கும்போது வெளியாகும் சக்திக்கு நிகரானது என்பதால் இதனை பயன்படுத்த இயலும் என இந்திய விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூனில் பகுதியில் அமைந்துள்ள பெற்றோலியம் மற்றும் எரிசக்தி பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை தற்போது வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நேரத்தில், நோய்த்தொற்று பரவமால் இருக்க பயன்படும் கவசமாக விளங்கிய உடையை அகற்றும் பணியை அரசு குறிப்பிடப்படவில்லை.இந்த கவச உடைகளை தூக்கி எறிவதற்கு பதிலாக எரிபொருளாக பயன்படுத்தலாம் என பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கருத்துகிறனர். 300 – 400 டிகிரி எரிசக்தியை இந்த உடையை எரிக்கும்போது வெளியாகும் என்பதனையும் ,ஆக்சிசன் இல்லாமலேயே இது செயல்படும் என்னும் கருத்தினை வெளியிட்டுள்ளது.குப்பையில் வீசி சுற்றுச்சூழலை கெடுப்பதற்காக இல்லாமல் மாற்று வழியாக இதனை பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.