Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பேருந்துகளில் வந்த புதிய வசதி! கொண்டாட்டத்தில் பயணிகள்!

New facility in government buses! Passengers in celebration!

New facility in government buses! Passengers in celebration!

அரசு பேருந்துகளில் வந்த புதிய வசதி! கொண்டாட்டத்தில் பயணிகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் பேருந்து போன்ற போக்குவரத்தை பயன்படுத்த அச்சம் அடைந்து வந்தனர்.ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் ,கல்லூரி, பள்ளி மாணவிகள் என அனைவரும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பேருந்துகளில் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதால் நடத்துநர் பேருந்து நிறுத்தம் வருவதை முன்கூட்டியே அறிவித்தாலும் ஒரு சிலர் அதனை கண்டுக்கொள்ளாமல் பேருந்து நிறுத்தை கடந்து அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வரை பயணம் செய்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.

இதனை முற்றிலும் தவிர்கும் வகையில் சென்னையில் பல்லவன் இல்லத்தில் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 300 மீட்டருக்கு முன்னதாகவே அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்து தகவல் ஒலிப்பான்கள் மூலம் அறிவிக்கப்படும் வசதிகள் பேருந்தில்  பொருத்தப்பட்டுள்ளது.

அதனை இன்று அமைச்சர் சிவசங்கர் ,எம்எல்ஏ உதயநிதி உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.மேலும் அதில் பயணம் செய்தனர்.முதற்கட்டமாக 150 பேருந்துக்களில் மட்டும் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் இவை புதிதாக ஒரு வழித்தடத்தில் பயணம் செய்ப்பவர்களுக்கு பெரிதும் உதவும்.இவை புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் எனப்படும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.இந்த திட்டம் விரைவில் அனைத்து பேருந்துகளிலும் கொண்டுவரப்படும்.

அதனை அடுத்து இவை பேருந்து நிறுத்தத்தின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிக்க செய்யும்.முன்னதாகவே இது போல புறநகர் ரயில்களில் அடுத்த ரயில் நிலையத்தின் பெயர் கூறும் வகையில் தானியங்கி பொருத்தப்பட்டுள்ளது அதனால் பயணிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version