Whatsapp இன் மெட்டா நிறுவனமானது தங்களுடைய பயனர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வரும் நிலையில், மீண்டும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இனி டாக்குமெண்ட் ஸ்கேன் செய்து ஷேர் செய்வதற்கு மூன்றாம் தரப்பு செயலியை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.
வாட்ஸ் அப்பின் மூலமாக உலகில் உள்ள எந்த மூலையில் இருப்பவரிடமும் மற்றொரு மூலையில் இருப்பவர் இணைய வசதியை மட்டும் கண்டு கலந்துரையாடல் மற்றும் வீடியோ கால் போன்றவற்றை கொள்ளக் கூடிய வகையில் இருக்கும் ஒரே சிறந்த செயலியாக whatsapp திகழ்ந்து வருகிறது.
Whatsapp செயலியின் புதிய அம்சம் :-
வாட்ஸ் அப்பில் டாகுமெண்ட்களை ஷேர் செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு, முதலில் whatsapp செயலியை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் whatsapp ஹோம் பேஜில் உள்ள + என்ற சிம்பலை கிளிக் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் டாக்குமென்ட் அல்லது புகைப்படத்தை ஷேர் செய்ய வேண்டும் என்றால் எதனை ஷேர் செய்ய வேண்டுமோ அதனை செலக்ட் செய்து கொண்டு மற்றொருவரின் உடைய மொபைலை ஸ்கேன் செய்வதன் மூலம் பகிர்ந்து கொள்வது எளிதானதாக அமையும்.
இதன்மூலம் நாம் என்ன அனுப்புகிறோம் என்பது நம்மை மற்றும் பெறுபவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. நம்முடைய பரிமாற்றங்கள் பாதுகாப்பானதாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.