Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்!

வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்!

உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். உலகின் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாகவும் வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதன் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்டேடஸ் அம்சத்தில் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த அம்சம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் மேலும், சில புதிய அம்சங்களை  வாட்ஸ்அப்பில் கொண்டு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, இந்த அம்சத்தில் ஒரு நபரிடம் பேசிய உரையாடலில் இருந்து குறிப்பிட்ட மெசேஜ்ஜை எளிதாக தேடி எடுக்க முடியும். ஏற்கனவே இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் இடம்பெற்றிருந்தாலும். தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவில் தரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ்களுக்கு ரியாக்‌ஷன்ஸ் அனுப்பும் அம்சத்தையும் கொண்டு வர உள்ளது. இந்த அம்சத்தில் 6 எமோஜ்ஜிக்களை ரியாக்‌ஷனாக அனுப்ப முடியும். இதே அம்சம் டெஸ்க்டாப் வாட்ஸ்அப்பிலும் கொண்டு வரப்பட உள்ளது.

ஒரு நபருக்கு எளிய முறையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்புவதற்காக கேமரா மீடியா பார் என்னும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப்பில் எமோஜிக்களை விரைவாக பயன்படுத்தும் வகையில், குறிப்பிட்ட வார்த்தைகளை டைப் செய்வதன் மூலம் எமோஜிக்கள் காட்டப்படும். அதை கிளிக் செய்து விரைவாக அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version