தமிழகத்தில் புதிய அரசு ஐடிஐ!! மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த மாதமே முடியும் கால கெடு!!

0
66

தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐ – களில் மாணவர்கள் சேர்வதற்காக அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நேரடி சேர்க்கைக்கு டிசம்பர் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

 

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு கீழ்காணும் மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்ட 10 இடங்களில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறந்திட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

 

இவ்வாறு திறக்கப்பட்ட 10 புதிய ஐடிஐகளில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்ற வருகிறது. மேலும் இதற்கான விண்ணப்பங்களும் மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன்படி கடலூர் மாவட்டம் – வேப்பூர், திருவண்ணாமலை – செங்கம், திண்டுக்கல் – குஜிலிம்பாறை, ராமநாதபுரம் – கமுதி, கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி, நாமக்கல் – சேந்தமங்கலம், புதுக்கோட்டை – கந்தர்வகோட்டை, திருவாரூர்- கூத்தாநல்லூர், திருப்பத்தூர் – நாட்றாம்பள்ளி, தூத்துக்குடி – ஏரல் ஆகிய 10 இடங்களில் சேர விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் :-

 

✓ பயிற்சி கட்டணம் இல்லை

✓ கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.750

✓ விலையில்லா மிதிவண்டி

✓ விலையில்லா சீருடை

✓ விலையில்லா காலணிகள்

✓ விலையில்லா பயிற்சிக்கான கருவிகள்

✓ கட்டணமில்லா பேருந்து வசதி போன்ற சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

குறிப்பு :-

 

மேலும் விவரங்களுக்கு 9499055689 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.