Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டாஸ் மார்க்களில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்!! குடிமகன்களுக்கான அற்புத ஆஃபர்!!

NEW GUIDELINES IN DOS MARKS!! Amazing offer for citizens!!

NEW GUIDELINES IN DOS MARKS!! Amazing offer for citizens!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசு புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மார்க் கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து சாதாரணமாக நாளொன்றுக்கு 120 கோடி மது பாட்டில்கள் விற்பனை ஆகின்றன. அவ்வாறு பார்க்கையில் வருடத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதுவே, பண்டிகை தினங்களை பொறுத்தவரையில் 120 கோடி என்பது 200 லிருந்து 300 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூலை எட்டி விடுகின்றன.அந்த வகையில் தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் உள்ளது.

இந்நிலையில், குடிமகன்கள் அதிகம் மது பாட்டில்களை வாங்கி செல்வதால், டாஸ்மார்க் கடைகளில் உள்ள வியாபாரிகள் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பெற்றுக் கொண்டுதான் மது பாட்டில்களை குடிமகன்களின் கையில் கொடுக்கின்றனர். இவை மட்டுமின்றி, இரவு நேரங்களில் முறைகேடான வகையில் மதுபானங்கள் விற்பனை செய்து வரப்படுகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதனை தடுக்கும் பொருட்டு அரசு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.அதன் படி டாஸ்மாக் மதுபான விற்பனையை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு 294 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை தமிழக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி மது பாட்டில்களுக்கு பில் வழங்கப்படும் என்பதை இந்த புதிய நடவடிக்கையாக உள்ளது. மேலும் இது ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தமிழக முழுவதும் கொண்டுவரப்படும் என்றும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் பொருத்தப்படும் புதிய கருவிகள் :-

இங்கு இந்த கருவிகளை பயன்படுத்தி மதுபான பெட்டிகளில் உள்ள QR Code மற்றும் மதுபான புட்டிகளின் லேபிளில் உள்ள QR Code-em Scan செய்ய வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் தினசரி சராசரி விற்பனை எண்ணிக்கை பொருத்து Handheld Device எண்ணிக்ககை வழங்கப்படும். இக்கருவி Network இருக்கும் பொழுது Online Mode-லும் Network இல்லாத பொழுது Offline Mode லும் செயல்படும். இக்கருவியானது எந்த கடைக்கு வழங்கபடுகிறதோ அந்த கடையில் மட்டுமே பயன்படுத்த இயலும். இதனை கடையின் அமைவிடத்துடன் Geofencing செய்திருப்பதால் கடை சுற்றளவை தவிர்த்து பயன்படுத்த இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி இக்கருவியில் ரசீது வழங்கும் முறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது :-

இக்கருவியின் மூலம் விற்பனை இரசீது அச்சிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். இதனை Bluetooth மூலம் Handheld Device இணைத்து பயன்படுத்த வேண்டும். இக்கருவியில் பயன்படுத்தப்படும் பொருட்டு இரசீது தாள் (I’aper Roll) உருண்டை வழங்கப்படும். Handheld Device-mய ஒருமுறை Charge செய்தால் 8 மணி நேரம் உபயோகிக்கலாம் என்றும் பணி நிறைவடைந்த உடன் இந்த கருவியை ஸ்விட்ச் ஆஃப் செய்து எடுத்து வைத்து விடலாம் என்றும் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டரை போன்று இந்த கருவிக்கும் login செய்து உள் நுழைந்து ஒவ்வொரு நாளும் கடையில் உள்ள ஸ்டாக்குகளின் எண்ணிக்கையை அப்டேட் செய்து விற்பனை ரசீதையும் குடிமகன்களுக்கு என்டர் செய்து எடுத்துக் கொடுக்கும் பொழுது இதில் எந்த வித ஒளியும் மறைவும் இருக்காது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் இரவு 10 மணிகளுக்கு மேல் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version