Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களின் கவனத்திற்கு! தமிழக ஊரடங்கு குறித்து புதிய தகவல்!

New information about Tamil Nadu curfew!

New information about Tamil Nadu curfew!

மக்களின் கவனத்திற்கு! தமிழக ஊரடங்கு குறித்து புதிய தகவல்!

கரோனா தொற்று  முதலில் சீன நாட்டில் தோன்றியது.அத்தொற்று தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவியது. அதுமட்டுமின்றி மனித உயிர்களை இழந்து பெருமளவு பின்னோக்கி செல்லப்பட்டோம். இந்நிலையில் கொரோனா தொற்றானது முதல் அலை இரண்டாம் அலை என முடிந்து தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதனையடுத்து அதன் தொடர்ச்சியாக டெல்டா வகை கொரோனா பரவத்தொடங்கியது. அதன் உரு மாற்றமாக தற்பொழுது ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது.

ஆப்பிரிக்காவில் தற்பொழுது இது அதிக தாக்கத்தை கொண்டுள்ளது. சிங்கப்பூர் போன்ற இதர நாடுகளிலும் இத்தொற்று பரவி வருகிறது. சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை சர்வதேச விமான நிலையங்களில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அவ்வாறு சோதனை நடத்தியதில் சிங்கப்பூரிலிருந்து வந்த கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆகி தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி உள்ளது.அதேபோல பிரிட்டனில் இருந்து தற்பொழுது சென்னை வந்த 9 வயது சிறுமிக்கும் கரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.நாளுக்கு நாள் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளின் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் இது குறித்து பல பொய்யான செய்திகளை பரப்பி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

தவிர்க்கும் விதத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். மேலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தற்போது பரவி வருகிறது. எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி தொடர்ந்து விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடை செய்யப்படுவதற்கான சூழல் தற்போது வரை ஏற்படவில்லை எனக் கூறினார். தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்பி அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.

Exit mobile version