இன்று தொடங்கும் புதிய புலன் விசாரணை பிரிவு!!காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு!!
பொது மக்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் காவல் துறையினர் குற்றம் செய்யும் குற்றவாளிகளை பல பிரிவில் வழங்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனை தொடர்ந்து காவல் துறை முக்கிய வழங்குகளை விசாரிக்க புதிதாக பிரிவு தொடங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளிவந்தது,
இந்த நிலையில் சென்னை கவலதுரையினர் தற்போது வெடிபொருட்கள் உட்பட முக்கிய வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு இன்று முதல் அமல் படுத்தப்படுகிறது.
இந்த பிரிவின் மூலம் முக்கிய வழக்கான கொலை, கொள்ளை, வழிப்பறி, வெடிபொருள், ஆட்கடத்தல், மத பிரச்சனை போன்ற வழக்குகளை விரைவில் முடிக்க 12 மாவட்டங்களில் புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட உள்ளது. இன்று முதல் அந்தந்த மாவட்ட துணை ஆணையர்கள் மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட உள்ளது.
மேலும் இந்த புது பிரிவியால் கஊரம் குறையும், அனைத்து பிரச்சனைக்கும் சரியான முடிவுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த புதிய புலன் விசாரணை பிரிவு இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. மேலும் இப்பிரிவில் உள்ள போலீசாருக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி முதல் நடைபெற்றது. மேலும் இந்த முகாமை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தொடக்கி வைத்தார்.