தேனி மாவட்டத்தில் புதிய நூலகம்! தொடக்க பணிகள் இன்று முதல் ஆரம்பம்!
தேனி மாவட்டம் பெரிய குளம் கீழ வட கரை ஊர் புற நூலகத்திற்க்கு நூலக கட்டிடம் கட்டுவதற்கு காலியிடம் ஒதுக்கி தருவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி தலைவர் அவர்களிடம் நூலக வாசகர் வட்டம் மூலம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில்கீழ வடகரை ஊராட்சி எல்லைக்குட்பட்ட இடத்தில் சர்வே பணி நடைபெற்றது. இப்பணியின் போது கிராம நிர்வாக அலுவலர் அகிலன் ஊராட்சி தலைவர் திருமதி செல்வராணி, செல்வராஜ், உபதலைவர் ராஜசேகர் வார்டு உறுபினர் மகாலிங்கம், தாலுகா சர்வேயர் நீலமேகம் மற்றும் வாசகர் வட்ட தலைவர் மோகன், பொருளாளர் ஜெயராஜ் புரவலர்கள், பொறியாளர் இராஜாமணி முன்னாள் இராணுவம் ஜெயராமன் ராம் லட்சுமன் ஸ்டோர்மோகன் நூலகர் ராஜகோபால் மற்றும் வாசகர்கள் சமுக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.