தமிழ்நாட்டில் நேற்று காலை 6 மணி முதல் நடைமுறையிலிருக்கும் தளர்வுகள் உடன் மேலும் சில தளர்வுகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் இருக்கின்ற நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் கடைகள் இரவு 9 மணி வரையில் செயல்படலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நாட்கள் செல்ல செல்ல நோய்த்தொற்று பாதிப்பு குறைந்துகொண்டே வருகின்றது. இதனால் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் தளர்வுகள் என்ன என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
நோய்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர்த்து எல்லா பகுதிகளிலும் இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு இருக்கின்ற செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள், இறுதிச் சடங்குகளில் 20 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.அந்த வகையில், இன்று முதல் இரவு 9 மணி வரையில் மளிகை கடைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி பேருந்து சேவையை ஆரம்பித்து இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு குறித்து எழுத்து தேர்வுகள் அரசு வழங்கி இருக்கின்ற வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல ஹோட்டல்கள் மற்றும் தேனீர் கடைகள் இனிபகங்கள், நடைபாதை கடைகள், கார வகை பண்டங்கள் விற்பனை கடைகள் போன்றவை வழக்கமான கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரையில் செயல்படலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் பகுதிகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கடைகளில் ஒரே சமயத்தில் அதிக பட்சமாக நபர்களை அனுமதிக்க கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அவசர மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை தவிர்த்து மற்ற செயல்பாடுகளுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. நோய்த்தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு விதிமீறல்கள் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.